fbpx

குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் ஆட்டு மந்தையில் அடைப்பு..!! இழிவான அரசியல் செய்யும் திமுக..!! கடுமையாக விமர்சித்த சீமான்..!!

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் நேற்று மதுரையில் பேரணி நடத்திய குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதும், துண்டறிக்கைகளைக் கொடுப்பதற்கு கூட கைது செய்வதுமான திமுக அரசின் செயல்பாடுகள் மக்களாட்சிக்கு எதிரான கொடுங்கோன்மையாகும்.

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அறப்போராட்டம் செய்ய முனைந்த கட்சியினரை கைது செய்து கடுமையாக நடத்தியுள்ளனர். மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜகவைச் சேர்ந்த பெண்களை ஆட்டுமந்தைகள் அடைக்கப்பட்டுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது மாநில அரசின் மாண்புக்கு பெரும் இழுக்காகும்.

கைது செய்து தூரமாகக் கொண்டு சென்று அடைப்பதும், மதுரையில் இடமே இல்லாதது போல ஆட்டுத் தொழுவத்தில் அடைப்பதுமான இழிவான செயல்பாடுகளையும், எதிர்க்கட்சிகளைக் கையாளும் மோசமான அணுகுமுறையையும் திமுக அரசின் பாசிசப் போக்கையே காட்டுகிறது” என்று கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக, இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ”மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பாஜக மகளிரணி சார்பில் நடைபெற்ற நீதிப் பேரணியில் கலந்து கொண்ட மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது” விமர்சித்திருந்தார்.

Read More : பெரும் சோகம்..!! விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 6 பேர் உயிரிழப்பு..!! பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு..?

English Summary

The incident of BJP members including Khushbu, who were arrested and confined in a herd of goats while holding a rally in Madurai, sparked a huge controversy.

Chella

Next Post

அதிக நேரம் உட்கார்ந்துகிட்டே இருக்கீங்களா..? இது எவ்வளவு ஆபத்துன்னு தெரியுமா..? எச்சரிக்கும் புதிய ஆய்வு..

Sat Jan 4 , 2025
A recent study has revealed that a sedentary lifestyle increases the risk of many health problems.

You May Like