fbpx

’பெண்களை அவமானப்படுத்திய பாஜக’..!! சென்னை To கன்னியாகுமரி வரை..!! காயத்ரி ரகுராம் நடைபயணம் அறிவிப்பு..!!

பாஜகவை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார்.

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். அண்மையில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், அண்ணாமலையின் ஒப்பதலின்படி காயத்ரி ரகுராம், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக, பாஜக மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் லோகநாதன் அறிவித்தார்.

’பெண்களை அவமானப்படுத்திய பாஜக’..!! சென்னை To கன்னியாகுமரி வரை..!! காயத்ரி ரகுராம் நடைபயணம் அறிவிப்பு..!!

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரை கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி. என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்தற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” என தெரிவித்தார்.

இந்நிலையில், பாஜகவை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜக பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது. இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள்….!

Sat Jan 14 , 2023
பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களை பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எந்த விதமான சிரமமும் மற்றும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் சுலபமாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் […]

You May Like