fbpx

BJP| சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய விவகாரம்.! பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கைது.!

மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய BJP பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் ஹவுரா பகுதியில் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 18 வயது நிரம்பாத சிறுமிகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சப்யா சாச்சி கோஸ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்து மீட்கப்பட்ட 6 சிறுமிகள் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நபர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜக பெண்களை பாதுகாப்பது இல்லை அவர்கள் விபச்சார புரோக்கர்களை பாதுகாக்கிறார்கள் என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

English Summary: BJP Member arrested for involving under aged girls in prostitution.Trinamol Congress slammed bjp for their act.

Next Post

பிரதமர் வருவதற்கு முன்பே BJP-இல் இணைந்த விஜயதரணி..!! அவசரம் காட்டுவது ஏன்..? பரபர பின்னணி..!!

Sat Feb 24 , 2024
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ விஜயதரணி, இன்று டெல்லி பாஜக தலைமையகம் சென்று பாஜகவில் இணைந்துள்ளார். BJP | கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் 3 முறை வென்றவர் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இவர், தற்போது சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி கொறடாவாக உள்ளார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இன்று டெல்லியில் பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் […]

You May Like