fbpx

Election Survey | தமிழகத்தில் மோடிக்கு 43% ஆதரவு.!! மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜகவின் என்டிஏ கூட்டணி.! வெளியான புது கருத்துக்கணிப்பு..!

Election Survey: டெய்லி ஹன்ட் மற்றும் டிவி9 இணைந்து டிரஸ்ட் ஆப் த நேசன் 2024 என்ற தலைப்பில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 64 சதவீதம் பேர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதை விரும்புகிறார்கள் என முடிவு வெளியாகி இருக்கிறது.

2004 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெய்லி ஹன்ட் மற்றும் டிவி 9 நிறுவனங்கள் டிரஸ்ட் ஆப் த நேசன் 2024 என்ற கருத்துக்கணிப்பை(Election Survey) நடத்தியது. ஆங்கிலம் மற்றும் இந்தி உட்பட இந்தியாவின் 11 முக்கிய மொழிகளில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 77 லட்சம் மக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்களின் மனநிலையை அறிவதற்காக நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பங்கு பெற்றவர்களில் 61% பேர் தற்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்ததாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக 63 சதவீதம் பேர் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பின் முக்கிய புள்ளிகள்: இந்தக் கருத்துக்கணிப்பில் பதில் அளித்த ஐந்து பேரில் மூன்று பேர் (64%) பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக நீடிப்பதற்கு ஆதரவாக உள்ளனர். 21.8% பேர் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளனர்.

பதிலளித்தவர்களில் 63 % பேர் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 57,7% பேர் வாக்களித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 24.2% வாக்குகளும் உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு 13.7% வாக்குகளும் கிடைத்துள்ளன.

உத்தரப்பிரதேசத்தில், பிரதமர் மோடி இந்த ஆண்டுத் தேர்தலில் 78.2% வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். ராகுல் காந்தி 10% வாக்குகள் பெற்றுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி 62.6% வாக்குகளைப் பெற்று இருக்கிறார். ராகுல் காந்தி 19.6% வாக்குகளையும், மம்தா பானர்ஜி 14.8% வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

தென்மாநிலங்களில் நிலவும் கடுமையான போட்டி: தமிழகத்தில் ராகுல் காந்தி 44.1% ஆதரவுடன் முன்னணியில் உள்ளார், பிரதமர் நரேந்திர மோடி 43.2% ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

எனினும் கேரளாவில் கடுமையான போட்டிக்கு இடையே மோடி முன்னிலை பெற்று இருக்கிறார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக 40.8% பேர் வாக்களித்துள்ளனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக 40.5% பேர் ஆதரவு தெரிவித்தனர்.

தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 60.1% வாக்குகள் கிடைத்துள்ளன. ராகுல் காந்திக்கு 26.5% வாக்குகளும், என். சந்திரபாபு நாயுடு 6.6% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி 71.8% வாக்குகளைப் பெற்றுள்ளார். ராகுல் காந்திக்கு 17.9% வாக்குகளும், என். சந்திரபாபு நாயுடு 7.4% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் பொருளாதாரம் பற்றிய மக்களின் கருத்து: இந்தக் கருத்து கணிப்பில் வாக்களித்தவர்களில் 61% பேர் பிரதமர் மோடியின் 10 வருட ஆட்சி சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர். 21% பேர் மோடியின் ஆட்சி திருப்திகரமாக இல்லை என தெரிவித்திருக்கின்றனர். மேலும் 53.3% பேர் தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மிகச் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.20.9% பேர் அரசின் பொருளாதாரக் கொள்கையில் முன்னேற்றம் தேவை என தெரிவித்தனர். இந்த கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் 60% பேர் பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கை சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் பிரதமர் மோடியின் பொருளாதார திட்டங்கள் மற்றும் கொள்கைகள் சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளனர். தென் மாநிலங்களில் 55% சதவீத மக்கள் அதனை ஆதரித்துள்ளனர். பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (52.6%) பிரதமர் மோடியின் தலைமையிலான அரசாங்கத்தின் தீவிரமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர், 28.1% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்புகளில் பங்கு கொண்டவர்களில் 63.6% பேர் மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கை மிகச் சிறப்பாக இருந்தது என பாராட்டு தெரிவித்துள்ளனர். எனினும் 14.5% மக்கள் அவரது வெளிநாட்டு கொள்கை திருப்திகரமாக இல்லை என தெரிவித்திருக்கின்றனர் .தேசிய அவசர காலங்களில் பிரதமர் மோடியின் தலைமை குறித்து 63.6% பேர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர், 20.5% பேர் அவரது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் 10.7% பேர் எந்தவித பதிலளிக்காமல் நடுநிலையாக இருந்துள்ளனர்.

Read More: 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை – தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும் பதற்றம்!!

Next Post

ராம நவமி: அயோத்தி ராமர் கோயிலில் 1,11,111 கிலோ லட்டு பிரசாதம்!

Tue Apr 16 , 2024
ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிர்சாபூரில் இருந்து 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பப்படுகின்றன. நாடு முழுவதும், ராம நவமி விழா ஏப்ரல் 17ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்பட உள்ள நிலையில், அயோத்தியில் விமரிசையாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில்,  ராம நவமியை முன்னிட்டு மக்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக […]

You May Like