18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை – தேர்தல் நேரத்தில் அதிகரிக்கும் பதற்றம்!!

சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 18 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 26ம் தேதி 3 தொகுதிகளுக்கும், மே 7ஆம் தேதி 7 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதோடு, துணை ராணுவப் படை, எல்லை பாதுகாப்பு படை, மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படை உள்ளிட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இச்சம்வத்தில் 18 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், சங்கர் ராவ் என்ற அந்த அமைப்பின் முக்கிய தலைவனும், போலீசாரால் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பல நக்சலைட்களும் கொல்லப்பட்டனர். தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இன்னும், பல நக்சலைட்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக்கூறியுள்ள பாதுகாப்பு படையினர், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், இந்த என்கவுண்டரில் இதுவரை 3 போலீஸாரும் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவோஸ்ட்டுகளிடம் இருந்து நான்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளையும் இதர பயங்கரமான ஆயுதங்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

Election Survey | தமிழகத்தில் மோடிக்கு 43% ஆதரவு.!! மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜகவின் என்டிஏ கூட்டணி.! வெளியான புது கருத்துக்கணிப்பு..!

Tue Apr 16 , 2024
Election Survey: டெய்லி ஹன்ட் மற்றும் டிவி9 இணைந்து டிரஸ்ட் ஆப் த நேசன் 2024 என்ற தலைப்பில் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 64 சதவீதம் பேர் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதை விரும்புகிறார்கள் என முடிவு வெளியாகி இருக்கிறது. 2004 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு டெய்லி ஹன்ட் மற்றும் டிவி 9 நிறுவனங்கள் டிரஸ்ட் […]

You May Like