fbpx

நளினி உள்ளிட்ட 6 பேரின் விடுதலையை எதிர்த்து பா.ஜ.க. மனு…

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் வெளிவந்த 6 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் வந்திருந்தபோது தேர்தல் பிரசார மேடையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 17 பேர் உயிரிழந்தனர். இந்த படுகலை வழக்கில் 26 தமிழர்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றார்கள் என கைது செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் 1998ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் பேரறிவாளன், நளினி, முருகன் , சாந்தன் உள்ளிட்டவர்களுக்கு தூக்கை உறுதி செய்தது. தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் 18 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். பின்னர் 4 பேர் தூக்கு தண்டனையையும், 3 பேர் ஆயுள் தண்டனையையும் அனுபவித்து வந்தனர். பேரறிவாளன் மற்றும் 3 பேர் என 4 பேரின் தூக்கை ரத்து செய்ய கருணை மனு ஜனாதிபதி மாளிகையில் நீண்ட காலம் நிலுவையில் இருந்தது.

எனவே இதுபற்றி முடிவு எடுக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டநிலையில் 2014ல் 4 பேரின் தூண்கு தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இதனால் ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆனது. இந்நிலையில் 7 தமிழரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு எதிராகவே இருந்து வந்தது.

இவ்வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாள் மட்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் 30 ஆண்டுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டேன். நன்னடத்தையை சுட்டிக்காட்டி சிறையில்இருந்து விடுவிக்க ஆணையிடப்பட்டது. எனவே பேரறிவாளன் விடுதலை ஆனார்.

ஆனால், 6 பேர் இந்த வழக்கை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் கடந்த 11ம் தேதி விடுவித்து உத்தரவிட்டனர். நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலையான நிலையில் நளினி அவர் காட்பாடி இல்லத்திற்கு சென்றுவிட்டார்.அவர் கணவரை இலங்கை அகதி என காரணம் காட்டி திருச்சி முகாமிற்கு அனுப்பிவைத்துவிட்டனர். இதனால் கண்ணீர் மல்க மீண்டும் போராடிக் கொண்டிருக்கின்றார். அவரவர் விரும்பும் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று பல தரப்பு கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு இவர்களின் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட அறிவிப்பில் நளினி, ரவிச்சந்திரன் இருவரும் தமிழர்கள். எஞ்சியிருப்பவர்கள் தாங்கள் விரும்பும் நாட்டுக்கு செல்லலாம் என கூறி விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் கைக்கு வந்ததை வழியில் பிடுங்கும் விதமாக பா.ஜ.க. மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

உங்கள் அதிகாலையை புத்துணர்ச்சியாக வைத்து கொள்ள வழிமுறைகள்..!

Fri Nov 18 , 2022
தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும்.  உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில வார்ம் அப் செய்து விட்டு, அதன் பின்னர் கடினமான சில பயிற்சிகளை செய்ய […]

You May Like