fbpx

BJP | “வீடியோ தயாரிப்பதில் பாஜகவினர் கில்லாடிகள்…” காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சர்ச்சை பேச்சு.!!

BJP: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கர்நாடகா குஜராத் அசாம் உட்பட 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலிலும் கர்நாடக மாநிலத்தின் சில பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் வருகின்ற ஏழாம் தேதி மீதி இருக்கும் 14 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே வீடியோ எடுத்து வெளியிடுவதில் பாஜகவினர்(BJP) கில்லாடிகள் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் போலி வீடியோக்களை உருவாக்குவதிலும் அவற்றை சமூக வலைதளங்களில் பரப்புவதிலும் பாஜகவினர் கை தேர்ந்தவர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார் . இதன் மூலம் ஒருவரது நற்பெயருக்கு பாஜகவினர் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இது போன்ற வேலையை செய்யாது எனவும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் தொகுதி பாஜக கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவர் மற்றும் பாஜக தலைவர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read More: ICC World T20 | உலகக்கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிராகரிப்பு.!! அதிருப்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்.!!

Next Post

ECI: முதல் கட்டம் 66.14%, இரண்டாம் கட்டம் 66.71% வாக்குப்பதிவு: இறுதி வாக்காளர் எண்ணிக்கையை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்..!

Tue Apr 30 , 2024
ECI: 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா உட்பட 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. முதல் இரண்டு […]

You May Like