திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலும் இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று பெண்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர்..இதனிடையே பெண்களுக்கு ரூ.1000 உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.. ஆனால் தேர்தல் வாக்குறுதியின் படி, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுவது உறுதி என்று முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார்..

இதனிடையே 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்..
இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்திற்கு தமிழகத்தில் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள 34.51 லட்சம் பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது… மேலும் இதற்காக மத்திய, மாநில அரசு திட்டங்களை பெறும் பயனாளிகள், ஏழ்மையில் உள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. அதன் பின் மற்ற பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு உதவித்தொக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது..