கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை சில ஊடகங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் தென் இந்திய (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா) மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்புகளின் படி
சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (கேரளா)
காங்கிரஸ் – 15
இடதுசாரி – 2
பாஜக – 1
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின்படி (கேரளா)
காங்கிரஸ் – 14-15
இடதுசாரி – 4
பாஜக – 1
இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி (கர்நாடகா)
பாஜக – 23-25
காங்கிரஸ் – 3-5
பிற – 0
(கர்நாடகாவில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன)
சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (ஆந்திரா)
காங்கிரஸ் – 0
பாஜக – 19-22
ஒய்.எஸ்.ஆர். காங். – 5-8
சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (தெலங்கானா)
காங்கிரஸ் – 5-8
பாஜக – 7-10
பி.ஆர்.எஸ். – 2-5
பிற – 0
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும்போது தென்மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை அறிய முடிகிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Read More:BJP vs Congress | ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு..!!’ மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்?