fbpx

100 நாள் வேலையை ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் பாஜக..!! சம்பளத்தை விடுவிக்க பணமில்லையா..? அல்லது மனமில்லையா..? கொந்தளித்த CM ஸ்டாலின்..!!

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழித்துக்கட்டும் வேலையில் பாஜக அரசு இறங்கியிருப்பதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு ‘வேண்டப்பட்ட’ கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

”காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு.!” என கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும்!

Read More : ’இனி ஆண்டுக்கு 2 முறை அல்ல 3 முறை’..!! CA தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள்..!! இந்திய தணிக்கை துறை அறிவிப்பு..!!

English Summary

Chief Minister M. Stalin has accused the BJP government of trying to abolish the 100-day work plan.

Chella

Next Post

’கவுண்டரில் வாங்கும் ரயில் டிக்கெட்டுகளை IRCTC இணையதளம் மூலம் ரத்து செய்யலாம்’..!! ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு..!!

Sat Mar 29 , 2025
Railway Minister Ashwini Vaishnav has responded by saying that train tickets purchased over the counter can be cancelled through the IRCTC website or by calling 139.

You May Like