fbpx

BJP: இன்று வேட்பாளர் பட்டியல்…! கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டி..‌?

கோவை தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களப்பணியை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வாகன பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணிக்கு அதனை நிறைவு செய்கிறார்‌‌. நாளை சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திலும் பாஜக தலைமையிலான என்டிஏ போட்டியிடுகிறது. இதற்கான உத்தேச வேட்பாளர் பட்டியல், தமிழ்நாடு பாஜக மையக் குழுவினரால் கட்சி மேலிடத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மையக்குழுவின் உறுப்பினர்களான மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் உள்ளனர். இப்பட்டியலில் பாஜக உறுதியாக வெல்லும் தொகுதிகளாக 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

2014 தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் பெயர் மீண்டும் கன்னியாகுமரியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், திருச்சியில் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன், வடசென்னையில் வினோஜ் பி செல்வம், சிவகங்கையில் டிடிவி தினகரன், விருதுநகர் தொகுதியில் ராதிகா, வேலூரில் ஏசிஎஸ் சண்முகம், பெரம்பலூர் தொகுதியில் பச்சமுத்து, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Vignesh

Next Post

WPL 2024: ரசிகர்களின் கனவை நிறைவேற்றிய மகளிர் அணி!… முதல்முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு!

Mon Mar 18 , 2024
WPL: பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பெங்களூரு – டெல்லி அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வீராங்கனைகள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க […]

You May Like