நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களை கவரும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி சேர மிரட்டல் வந்ததாகவும், தேமுதிகவின் வங்கிக் கணக்குகளை முடக்கி அச்சுறுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
முன்னதாக தொகுதி பங்கீட்டின் போது, பாஜக உடன் தேமுதிக கூட்டணி உறுதியானதாக தகவல் வெளியான நிலையில், தொண்டர்களின் விருப்பப்படி கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : Good News | ‘இது இருந்தால்போதும்’..!! தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!