Good News | ‘இது இருந்தால்போதும்’..!! தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்..!!

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டண சலுகை வழங்கப்பட்டு வழங்கி வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு, அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் மேம்பட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. கல்வியில், வேலையில் இடஒதுக்கீடு, மாதந்தோறும் உதவித்தொகை, பேருந்துகளில் கட்டண சலுகை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஏறிய இடத்தில் இருந்து 100 கிமீ வரை கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். அதற்கு பின் 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய வசதியாக புதிய பேருந்துகள் வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது தவிர பழைய பயண அட்டையை காட்டி பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என்று மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Read More : மாணவர்களே செம குட் நியூஸ்..!! இந்த தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு..!!

Chella

Next Post

தொழில் தொடங்கும் பெண்கள் ரூ.50,000 வரை கடன்..‌.! மத்திய அரசின் சூப்பர் திட்டம்...!

Thu Apr 4 , 2024
நாட்டில் சீரான வளர்ச்சியை ஊக்குவிக்க பெண் தொழில்முனைவோரின் நிலையான வளர்ச்சிக்கான தேவை இப்போது மிக முக்கியமான ஒன்று. பெண்களின் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்காக பல நிதியுதவி திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் வங்கிகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அப்படியான இரண்டு சிறப்பு திட்டங்களை இப்பொழுது பார்க்கலாம். முத்ரா யோஜனா திட்டம் : அழகு நிலையம், டியூஷன் சென்டர், தையல் பிரிவு போன்ற சிறு […]

You May Like