தமிழ்நாட்டை வஞ்சித்து கொண்டிருக்க கூடிய பாஜகவிற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய கனிமொழி, இந்திய நாட்டை பாசிசத்தின் பிடியிலிருந்து மீட்டெடுக்க உதித்து இருக்கக்கூடிய சூரியன் திராவிட நாயகன், நம்முடைய முதலமைச்சர். சில மாதங்களுக்கு முன்னால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் எல்லாம் இந்த கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் மத்திய அரசு கைக்கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், நான் இருக்கிறேன் உன்னுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு என்று கருணையோடு ஓடிவந்தது நம்முடைய முதலமைச்சர் தான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் எந்த பகுதியிலிருந்தாலும் நிவாரணம் வழங்கியது நம்முடைய முதலமைச்சர் மட்டும் தான்.
நமக்கு வரவேண்டிய நிதியையும் தருவதில்லை. நம்ம கிட்ட இருந்து வாங்குகின்ற வரியைக் கால்வாசி கூட திருப்பி கொடுக்கவில்லை. 1 ரூபாய் வாங்கினால் 26 பைசா தான். ஆனால் உத்தரப்பிரதேச அரசுக்கு 2 ரூபாய் 2 பைசா, இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கக்கூடிய ஓர வஞ்சனை செய்து கொண்டிருக்கக் கூடிய பாஜகவுக்கு, பாடத்தைச் சொல்லித் தரக்கூடிய தேர்தல் இந்த தேர்தல் என்பதை உணர்ந்து கொண்டு இந்தத் தேர்தலிலே நாம் பணியாற்ற வேண்டும்.
பிரதமர் மோடி என்ன சொன்னார். 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது இந்தியா உலகத்திலேயே பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் முன்னேறிய நாடாக இருக்கும் என்றார், அவருடைய சாதனை என்ன என்றால், இன்றைக்கு இந்தியாவின் Global hunger index குறியீடு 111வது இடம். தமக்கு மேலே நேபால், பங்களாதேஷ், பாகிஸ்தான் இருக்கிறது. இது தான் அவர்கள் செய்திருக்கக்கூடிய சாதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.