பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார்.
பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் கிளையாக மாறியிருப்பதால் அதை இந்திய மற்றும் பாஜக தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். ஒரு காலத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தை உலகம் முழுவதும் மதிக்கும் காலம் இருந்தது, ஆனால் தற்போது பாஜகவின் ஒவ்வொரு தவறுக்கும் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.
மதத்தின் பெயரால் அக்கட்சி வாக்காளர்களை துருவப்படுத்துகிறது. ஹிமாச்சல பிரதேசத்தில், அவர்கள் வாக்குகளுக்காக முஸ்லிம்களை குறிவைக்கிறார்கள், தேர்தல் ஆணையம் எதுவும் செய்யவில்லை என கூறினார்.