Election 2024: நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தலில் தமிழகத்திலும் பாஜக வெற்றி பெறும் என அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 18-வது பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பொது தேர்தல் தேதி நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இந்தியாவின் பிற பகுதிகளில் வலுவாக இருந்தாலும் தமிழகம் மற்றும் கேரளா உட்பட தென் மாநிலங்களில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த வருட தேர்தலில் மூலம் தென் மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்த பாஜக முடிவு செய்து இருக்கிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் 2024 ஆம் வருட தேர்தல் இலக்கான நான் ஒரு தொகுதிகளுக்கு மேல் பெறுவதற்காக அக்கட்சியின் முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை பல்வேறு தேசிய தலைவர்களையும் தமிழ்நாட்டிற்கு தேர்தல் பரப்புரைக்காக அனுப்பி வைக்கிறது. கடந்த மாதம் முதலே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்திற்கு தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனை எதிர்த்து போட்டியிடும் பாஜகவின் கார்த்தியாயினியை ஆதரித்து அரியலூரில் பிரச்சாரம் செய்த ஜே.பி நட்டா தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி உறுதியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது எங்களது வெற்றி உறுதி என தெரிவித்த அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சனாதான தர்மத்தை அழிப்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ் மொழியை எப்படி அவமானப்படுத்துவது என்று திராவிட கட்சிகள் சிந்திப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.