fbpx

ஜம்மு காஷ்மீரில் குண்டு வெடிப்பு; 8 மணி நேர இடைவெளியில் இரண்டு பேருந்துகளில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

ஜம்முகாஷ்மீரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வர உள்ளார்.

இந்நிலையில் உதம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டொமைன் சொயில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நடத்துனரும் அவருடைய நண்பரும் காயமடைந்தனர். பெட்ரோல் பங்கில்  நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் குண்டு வெடித்த நிலையில் எட்டு மணி நேரம் கழித்து, இன்று காலை 5 மணி அளவில் உதம்பூர் பஸ் ஸ்டாண்டில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த மற்றொரு பஸ்ஸில் குண்டு வெடித்தது.

தகவல் கிடைத்ததும் அதிரடி படை வீரர்கள் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வேறு எங்கையாவது குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுருக்கிறதா என்று சோதனை செய்தனர். மோப்பநாய் உதவியுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுருந்த பேருந்துகளை அதிரடி படை வீரர்கள் சோதனை செய்தனர்.

Rupa

Next Post

கட்டாய திருமணம்..!! கணவனை கைவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்..!!

Thu Sep 29 , 2022
பெற்றோரால் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் கணவனை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜான்சிராணி (18) என்பவர் கண்டாச்சிபுரம் அருகே பழைய கருவாட்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து (22) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 18 வயதான ஜான்சிராணிக்கு கடந்த ஆண்டு அவரது உறவினரான கிளிண்டன் என்பவரை பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். […]

You May Like