அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், முக்கிய சுற்றுலாத்தலமான நயாகரா அருவி முற்றிலும் உறைந்து காணப்படுகிறது.
அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் நிலவிய பனிப்புயல் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் சூறாவளி காற்றுடன் அங்கு வீசி வரும் பனிப்புயல் அமெரிக்காவை புரட்டி போட்டு உள்ளது. மைனஸ் 48 டிகிரி செல்சியசில் குளிர் வாட்டி வருவதால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது.
இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய சுற்றுலாத்தளமான நயாகரா அருவி அதிர்ச்சியூட்டும் வகையில் பனியால் உறைந்து காணப்படுகிறது. நயாகரா அருகில் இருந்த மலைகள் அடர்த்தியான பனியால் மூடப்பட்டுள்ளன.