நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நேற்று அறிவிக்கும்போது திடீரென ”ரத்தக் கொதிப்பு” பாடல் ஒலித்ததால் சீமான் கோபமடைந்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்ற தேர்தலில், ஏற்கனவே தங்கள் கட்சி பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை தரும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். ஆனால், அந்த சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கரும்பு விவசாயி சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக படகு, கப்பல் அல்லது தீப்பெட்டி சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்கள் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்து, “மைக்” சின்னம் தான் என்பதை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி “மைக்” சின்னத்தில் போட்டியிடும் என்று சீமான் நேற்று அறிவித்தார். அதன்படி, சென்னையில் சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது, சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங்டோன், “ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு… எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு” என்ற பாடலுடன் சப்தமாக ஒலித்தது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்ததால் அந்த நபர் அங்கிருந்து வெளியேறினார்.
Read More : Toll | 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!