fbpx

வீட்டு வாசலில் தெளிக்கப்பட்ட ரத்தம்..!! அதிகாலையில் கோலம் போட வந்த பெண்கள் கதறல்..!! விருதுநகரில் மர்மம்..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகராட்சிக்குட்பட்ட உச்சி சுவாமி கோயில் 4-வது குறுக்குத் தெரு அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் லேசானது முதல் பலத்த மழை பெய்தது. மழையால் அப்பகுதி மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதையடுத்து, இரவு வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டனர். பின்னர், அதிகாலையில் பெண்கள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டு வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. இதனால் பீதியடைந்த மக்கள், சாலையில் கூடி இது என்னவாக இருக்கும் என பேசிக் கொண்டனர். மேலும் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன் பகுதியிலும் ரத்தம் தெளிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு எங்கள் தெருவின் பின்பகுதியில் இதே போல் ஒரு வீட்டு வாசலில் மட்டும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இன்று 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் ரத்தம் தெளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவிலும் ரத்தம் இருப்பதால் இதை யார் செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என தெரியவில்லை என்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில், நேற்றிரவு எனக்கு தூக்கம் வராததால் 1 மணி வரை விழித்துக் கொண்டிருந்தேன். யாருடைய நடமாட்டமும் இல்லாமல்தான் இருந்தது. அதன் பிறகு யாரேனும் வந்தார்களா என தெரியவில்லை என்றார். இந்த விவகாரம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சாரணை நடத்தி வருகின்றனர்.

யாரையாவது பலி கொடுக்க இப்படி செய்துள்ளார்களா? அல்லது மாந்திரீக வேலைக்காக ரத்தக் காவு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அது போல் ரத்தம் தெளிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆங்கிலத்தில் பி.ஆர். என எழுதியிருந்தது. அந்த ரத்தம் மனித ரத்தமா, இல்லை விலங்குகளின் ரத்தமா என சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பொங்கல் பண்டிகை..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் சக்கரபாணி..!!

Mon Nov 6 , 2023
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிவாரண உதவியும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை அனைத்தும் பொங்கலுக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல போலி ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க சாத்தியக்கூறு […]

You May Like