fbpx

வீடு முழுவதும் ரத்தக்கறை..!! 2-வது திருமணத்திற்கு பெண் தேடிய கணவர்..!! இந்திய வம்சாவளி இளைஞர் செய்த செயலை பாருங்க..!!

அமெரிக்கா வெர்ஜினியாவில் அமைந்துள்ள மனாஸ் பூங்காவில் வசித்து வருபவர் நரேஷ் பட் (33). இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது மனைவி மம்தா கப்லே பட் (28). இவர், செவிலியராக பணிபுரிந்து வரும் நிலையில், ஜூலை 29ஆம் தேதி மம்தா திடீரென மாயமாகியுள்ளார்.

ஆனால், நரேஷ் காவல் நிலையத்தில் புகாரளிக்காமல் கூகுளில் மறுமணத்திற்கு மணமகள் தேடியுள்ளார். மேலும், மனைவி இறந்தால் கடன் என்னவாகும்..? மனைவி காணாமல் போனால் என்ன நடக்கும்..? போன்ற விஷயங்களை கூகுளில் தொடர்ந்து செய்து கொண்டிருந்துள்ளார். அவரது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டதாலும், மம்தா பணிக்கு வராததாலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்ட் 22ஆம் தேதி போலீசார், நரேஷின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, படுக்கை அறையிலும், பாத்ரூமிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. அந்த ரத்தக்கறை மம்தாவின் ரத்தத்துடன் தொடர்பு இருப்பது டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நரேஷை பிடித்து விசாரித்த போது மம்தா உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. மம்தா காணாமல் போவதற்கு சில தினங்களுக்கு முன் நரேஷ் ஒரு கடைக்கு சென்று 3 கத்திகளை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கேட்டபோது பிரிந்து செல்ல மட்டுமே முடிவு எடுத்தோம் என்று கூறினார். நரேஷ் மம்தாவை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மறுமணம் செய்வதற்காக நரேஷ் தனது மனைவியை கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்த நிலையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ராட்சத ராட்டினம்..!! நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சி..!! 60 அடி உயரத்தில் தொங்கிய 13 வயது சிறுமி..!!

English Summary

It is suspected that Naresh may have murdered Mamta and dismembered her body.

Chella

Next Post

’மொத்தமும் போச்சு’..!! ’கையில இருந்த பணத்தையும் செலவு பண்ணிட்டோம்’..!! நடிகை மைனா நந்தினிக்கு இப்படி ஒரு நிலைமையா..?

Fri Dec 6 , 2024
Maina Nandini and her husband Yogeswaran have said that their hard work and money have been wasted.

You May Like