fbpx

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு இன்று பிறந்தநாள்..!! மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் கடைசியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பதான் திரைப்படத்திற்கு எதிர்ப்பு : 4 ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதான் படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த பதானில் ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். உலகம் முழுவதும் அந்தப் படமானது 1000 கோடி ரூபாய் வசூலித்தது.

ஜவான் : பதான் படத்துக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான். படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். அந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்தனர். இப்படமானது கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று 1,000 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அவருக்கு மொத்தம் 6,000 கோடி ரூபாய் வரை சொத்து இருக்கிறதாம். மொத்தம் 12 சொகுசு கார்களையும், அதாவது புகாட்டி வெய்ரோன், ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கூப், பென்ட்லி, பிஎம்டபிள்யூ 6 மற்றும் 7 சீரிஸ், ஆடி ஏ8எல், லேண்ட் ரோவர் ரேஞ்ச், டொயாட்டா க்ரூய்ஸ், மிட்சுபிஷி பஜேரோ, ஹுண்டாய் கிரேட்டோ மற்றும் வால்வோ பிஆர் 9 கார்களை வைத்திருக்கிறாராம். இவை தவிர்த்து மும்பை, லண்டன், துபாய் ஆகிய இடங்களில் 3 பங்களாக்களையும் வைத்திருக்கிறாராம்.

Chella

Next Post

கட்சிப் பணிகளில் காணவில்லை..!! சினேகன் மீது எழுந்த புகார்..!! அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்..!! மநீம அதிரடி

Thu Nov 2 , 2023
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து தொடந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இதனால் இந்த கட்சியின் வருங்காலம் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் நீதி மய்யம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 3.7 விழுக்காடு வாக்குகள் பெற்று நாங்களும் அரசியல் களத்தில் இருக்கிறோம் என்று அழுத்தமாக தெரிவித்தது. அடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக […]

You May Like