ஜம்முவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் 6 பேர் காயமடைந்தனர்..
ஜம்முவின் நர்வால் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இன்று காலை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்..
இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..
இதனிடையே பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.. மேலும் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மற்றும் வரவிருக்கும் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்த நிலையிலும் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..