சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு, மின்னஞ்சல் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீர் என்ற பெயரில் மதியம் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ஆர்டிஎக்ஸ் வகையில் இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, சோதனை செய்து பார்த்ததில், இது புரளி என்பது தெரியவந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டிலும் எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வராக இருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், தற்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.