fbpx

பரபரப்பு…! 5 மாநில விமான நிலையங்களுக்கு வெடி குண்டு மிரட்டல்…!

இந்தியாவில் பல விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நாடு முழுவதும் பாதுகாப்பு கவலை அதிகரித்துள்ளது. கோவா, கொல்கத்தா, வாரணாசி, சண்டிகர் மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தல்கள் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும், முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று, கோவாவின் டபோலிம் விமான நிலையத்திற்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் முதல் வெடிகுண்டு மிரட்டல் ஆனது விடுக்கப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் புகாரை பதிவு செய்ததை அடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு பிரிவினர் சோதனை நடத்தினர். விசாரணையில் இது போலியான மெயில் என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய இயக்குநர் தனம்ஜெய ராவ் கூறியதாவது; அதிகாரிகள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலைய இயக்குனருக்கும் நேற்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு விரட்டு வந்தது, தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை. வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Vignesh

Next Post

எச்சரிக்கை!… RO வாட்டரை குடிக்கவேண்டாம்!… தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவிப்பு!

Wed May 1 , 2024
RO water: RO வாட்டர் பியூரிஃபையரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயன்படுத்த வேண்டாம் என்று தமிழ்நாடு வாட்டர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசன் அறிவித்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் குடிநீர் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. குரைந்தது 2 லிட்டர் தண்ணீராவது தினசரி குடிக்க வேண்டும். தினசரி குடிக்கும் தண்ணீரானது நல்ல ஆரோக்கியமான முறையில் சுத்திகரிக்கப்பட்டதாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். […]

You May Like