fbpx

அடி தூள்.. ஒரே பணியில் 30 ஆண்டுகள் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதிய உயர்வு..!! – தமிழ்நாடு அரசு

ஒரே பதவியில் 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, போனஸ் உயர்வு வழங்கப்படுவது குறித்து புதிய விளக்கத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில், நிதித்துறையின் சார்பில் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 216ன்படி, ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணியில் நீடிக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ஒரு போனஸ் உயர்வு வழங்கப்படும்.

2009ம் ஆண்டு வெளியான அரசாணை 234, 2017ல் வெளியான அரசாணை 303 ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, அதே பதவியில் 30 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்த பணியாளர்களுக்கு தர ஊதியம் உள்பட அடிப்படை ஊதியத்தின் 3 சதவீதத்தில் போனஸ் அதிகரிக்கப்படலாம் என்பது தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியக் கட்டமைப்பிலும் தொடரும்.

2000ம் ஆண்டில் வெளியான நிதித்துறையின் கடிதம் எண் 35681ல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வுக்கான உரிமைகளை விட்டுக் கொடுத்து அதே பதவியில் தேக்கமடையும் பணியாளர்கள், நிதித்துறை அரசாணை 562ன்படி ஒரு போனஸ் உயர்வை அனுமதிக்க தகுதியற்றவர்கள். 2020 மற்றும் 16.12.2024 தணிக்கை ஆட்சேபனைகளின்படி கணக்குத் தணிக்கை தலைவர், அலுவலக உதவியாளர்கள் பதவியில் 30 ஆண்டுகள் பணியை முடித்தவர்களுக்கு ஒரு போனஸ் அதிகரிப்பு வழங்க ஓய்வு ஊதிய முன் மொழிவுகளில் தனது ஆட்சேபனை எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் தாக்கல் செய்த ஓஏ 91ல் எண் 1625ன்படி, பதிவு எழுத்தர் பணியிடத்துக்கு பணியிட மாற்றம் மூலம் நிர்ணயிக்கப்பட்ட தகுதியுள்ளவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவதால், அலுவலக உதவியாளர் பதிவு உயர்வுக்கான வாய்ப்புகள் இல்லை. ரெக்கார்டு கிளார்க் பதவி என்பது அலுவலக உதவியாளர் பதவிக்கான வழக்கமான பதிவு உயர்வு அல்ல என்பதையும், பணியிட மாற்றம் மூலம் பதிவு எழுத்தர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதியுள்ளவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.

பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுவதில்அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு நிதித்துறை கடிதம் எண் 35681ன் விளக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இடமாற்றம் மூலம் பதிவு எழுத்தர் நியமனத்தை துறந்தாலும் ஒரு போனஸ் உயர்வுக்கு தகுதியுடையது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more: மீண்டும் பயங்கரம்!. சிலி-மியான்மரில் நிலநடுக்கம்!. பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!.

English Summary

Bonus, salary hike for those with 30 years of service: Tamil Nadu government issues order

Next Post

ப்ளீஸ்.. நடிகர் ஸ்ரீ குறித்து தவறான தகவல்களை பரப்பாதீங்க..!! - குடும்பத்தினர் வேண்டுகோள்

Fri Apr 18 , 2025
This is the situation of actor Sri..!! Please.. don't spread wrong information..!! - Family appeal

You May Like