fbpx

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி Bye Pass, தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஆண்டு தோறும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது. பண்டிகை கால நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு மையங்கள் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Bookings for government express buses have begun ahead of the Pongal festival.

Vignesh

Next Post

டாடா ஸ்டீல் செஸ்!. சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்!.

Mon Nov 18 , 2024
Magnus Carlsen, Kateryna Lagno win Tata Steel Chess India blitz titles

You May Like