fbpx

அதிரடி…! ஆபத்தை விலைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள்…! மாவட்ட ஆட்சியர் போட்ட உத்தரவு…!

ஆபத்தை விலைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமான குழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டங்களில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரிகுழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், சில உயிரிழப்புகள் நிகழவும் காரணகமாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் ‌

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்தவெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக் கிணறுகளையும் திறம்பட பாதுகாப்பது அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாத வகையில் ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தல் மற்றும் இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

Vignesh

Next Post

மக்களே உஷார்...! இன்று கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டத்தில் கனமழை...!

Mon Aug 28 , 2023
கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில […]

You May Like