பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்த கட்சியினரே போர்க்கொடி தூக்கி உள்ளதால் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
. பிரிட்டன் ஆளுங்கட்சி எம்.பி கிறிஸ் பிஞ்சர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவரை கடந்த பிப்ரவரி மாதம் அரசின் துணை கொறடாவாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்தார்.. அப்போதே போரிஸ் ஜான்சன் மீது பல விமர்சனங்கள் எழுந்தன.. இந்த நிலையில் கடந்த வாரம், கிறிஸ் பிஞ்ச ஒரு தனியார் கிளப்பில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கடந்த வாரம் புகார் எழுந்தது.. இதற்கு மத்திய கிறிஸ் பிஞ்சர் துணை தலைமைக் கொறடா பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் எம்.பி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்..
ஆனால் பிஞ்சர் குறித்து பேசிய போரிஸ் ஜான்சன் “ அரசாங்கத்தில் பிஞ்சரை நியமித்தது தவறு என்று நான் நினைக்கிறேன், அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கொள்ளையடிக்கும் அல்லது தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் எவருக்கும் இந்த அரசாங்கத்தில் இடமில்லை என்பதை நான் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், ”என்று கூறினார்.
கடந்த ஐந்து நாட்களாக பிஞ்சர் விவகாரம் குறித்து அரசு முரண்பாடான விளக்கங்களை அளித்து வந்தது.. பிப்ரவரியில் பிஞ்சரை பதவி வழங்கப்பட்ட போது ஜான்சன் எந்த குற்றச்சாட்டுகளையும் அறிந்திருக்கவில்லை என்று அமைச்சர்கள் ஆரம்பத்தில் கூறினர். ஆனால் போரிஸ் ஜான்சனுக்கு பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகள் தெரியும் என்று அரசின் செய்தித்தொடர்பாளர் கூறினார்..
இதனிடையே போரிஸ் ஜான்சன் கிறிஸ் பிஞ்சர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதாரச் செயலர் சஜித் ஜாவித் இருவரும் நேற்று முன் தினம் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர், பிரதமர் தனது அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரின் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை கையாண்ட விதத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலக கோரி அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உட்பட 54 பேர் விலகி உள்ளனர்.. சொந்த கட்சியினரே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும் போரிஸ் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். எனவே அவர் மீது விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது..
இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலகிய நிலையில் இன்று போரிஸ் ஜான்சனும் இன்று பதவி விலக உள்ளதாக கூறப்படுகிறது.. அவர் பதவி விலகினால் பிரிட்டனில் ஆட்சி கவிழ்ந்துவிடும்.. எனவே மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.