மத்திய பிரதேசத்தில் ஒரு எட்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் பீட்டல் பகுதியில் மாண்டவி என்ற கிராமம் அமைந்துள்ளது. இதில் ஐந்து வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தபோது சரியாக மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்துள்ளார்.
மகனை நீண்ட நேரமாக காணவில்லை என்று தேடி வந்த தாய், ஆழ்துளை கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து 400 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் இருக்கும் சிறுவன் 55 அடி ஆழத்தில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர்.
அவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் சிறுவனை உயிருடன் நிற்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். சிறுவன் 55 அடி ஆழத்தில் இருப்பதால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகின்றது. சிறுவனை எப்படியாவது உயிருடன் மீட்டு விட வேண்டும் என்று முழு முயற்சியில் மீட்பு பணி நடந்து வருகிறது.