குழந்தைகளின் வளர்ச்சியில் படிப்பு, தூக்கம் மற்றும் சத்தான உணவு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு தினசரி உடல் இயக்கமும் முக்கியமானது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன், டிவி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால், வெளியில் விளையாடும் நேரம் குறைந்து வருகிறது. குழந்தைகள் தினமும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர். பொதுவாக, 5 முதல் […]

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களின் உணவு பழக்கம் மிகவும் முக்கியமானது. சிறு வயதில் கிடைக்கும் சரியான ஊட்டச்சத்துகள் தான் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக அமைகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கவும், உடல் வலிமையாக இருக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்ப்பது அவசியம். குறிப்பாக […]

குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 […]

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் […]

குழந்தைகளின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான கட்டம் 5 முதல் 18 வயது வரை. இந்த வயதில் எலும்புகளின் நீளமும் அடர்த்தியும் அதிகரிப்பதுடன், தசைகளும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. இந்தக் காலகட்டத்தில் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் கிடைக்காவிட்டால், அவர்களின் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தினசரி உணவில் சத்தான உணவுகளை சரியான அளவில் சேர்ப்பது மிகவும் அவசியம். […]

சேலம் மாவட்டம், மேட்டூா் அடுத்த ஆண்டிகரையைச் சோ்ந்தவா் 26 வயதான வல்லரசு. கட்டடத் தொழிலாளியான இவருக்கு 23 வயதான ஸ்ரீபிரியா என்ற மனைவி உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இவர்களுக்கு 4 வயதான மைவிழி என்ற மகளும், 2 வயதான தா்ஷன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், இவர்களுக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாக […]

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த […]