fbpx

ஆன்லைனில் கயிறு ஆர்டர் செய்து காதலியை கொன்ற காதலன்!. 2 நாளாக சடலத்துடன் சிகரெட் புகைத்த அதிர்ச்சி!.

Murder: வேறொருவருடன் பேசிய ஆத்திரத்தில் காதலியை கொலை செய்து 2 நாட்கள் உடலுடன் காதலன் இருந்த சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த மாயா கோகாய் என்ற 19 வயது இளம்பெண் தனது கடந்த 23-ந்தேதி [சனிக்கிழமை] கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திராநகர் பகுதியில் உள்ள பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தனது காதலன் ஆரவ் ஹர்னி என்பவருடன் ரூம் எடுத்து தங்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில்’ வீடியோக்கள் பதிவிடுவதில் மாயா ஆர்வமாக இருந்துள்ளார். ஆரவிடம் சரியாக பேசவில்லை. இதனால், ஆத்திரமடைந்த காதலன், காதலியை கண்டித்துள்ளார். மேலும், மற்றொரு நபருடன், மாயா பேசி வந்ததையும் அறிந்த ஆரவ், காதலியை தீர்த்து கட்ட, திட்டங்கள் தீட்டினார்.

மதியம் 12.30 மணியளவில் அறைக்குள் சென்றவர்கள் இரண்டு நாட்களாக வெளியே வராமல் இருந்த நேற்று [செவ்வாய்க்கிழமை] காலை 8.30 மணியளவில் காதலன் ஆரவ் ஹர்னி மட்டும் வெளியே வந்துள்ளார். அவர் அங்கிருந்து சென்ற பின்னர் அறைக்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே சென்ற பார்த்தபோது மாயா கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாயாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாயா கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

உடலுடன் இரண்டு நாட்களாக இருந்த அவர் பெரும்பாலான நேரம் சடலத்தின் முன் அமர்ந்து சிகரெட் புகைத்தபடி கழித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயாவின் உடலில் தலை உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அவரது மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளார். மேலும் அறையில் இருந்த சமயத்தில் நைலான் கயிறு ஒன்றையும் செப்ட்டோவில் ஆர்டர் செய்துள்ளார் ஆரவ்.

அரையில் இருந்த பொருட்களை வைத்து இவர்களது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாயா கோகாய் யூடியூபில் vlogging வலோக்கிங் செய்பவர் என்று தெரியவந்துள்ளது. கொலை திட்டமிட்டு செய்யப்பட்டதை இது உறுதிப்படுத்துகிறது. நவம்பர் 23 முதல் 26 வரை அறைக்குள் வேறு யாரும் நுழைந்ததாக சிசிடிவி காட்சிகள் காட்டவில்லை. எனவே ஆரவ் தான் கொலையாளி என்பது உறுதியாகியுள்ள நிலையில் போனை ஸ்விட்ச் ஆப் செய்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Readmore: ஷாக்!. மருந்து நிறுவனத்தில் நச்சு வாயு கசிவு!. ஒருவர் உயிரிழப்பு!. 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

English Summary

Boyfriend kills girlfriend by ordering rope online!. The shock of sitting in front of the dead body and smoking for 2 days!

Kokila

Next Post

மாதம் ரூ.64,000 சம்பளம்..!! வங்கியில் வேலை..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Nov 28 , 2024
Karnataka Bank has issued a new notification regarding employment.

You May Like