fbpx

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம்!. ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி தேர்வு!

BrahMos Aerospace: பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக பிரபல ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை இந்தியாவில் தொடங்கி பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்தன. இந்தியாவின் பிரம்மபுத்ரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகிவற்றின் பெயர் சேர்க்கப்பட்டு பிரம்மோஸ் பெயர் உருவாக்கப்பட்டது. நிலம், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் போர் விமானங்களில் இருந்து ஏவும் வகையிலான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டன. இந்த ஏவுகணை 2.8 மேக் வேகத்தில் (ஒலியைவிட 3 மடங்கு அதிகம்) சீறிப்பாய்ந்து 290 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் படைத்தது.

இந்தியாவின் ஏற்றுமதிக்கான முக்கியமான பாதுகாப்பு உபகரணமாக பிரம்மோஸ் உருவெடுத்துள்ளது. தென்சீனக் கடல் பகுதியில் சீன கடற்படை ஆதிக்கம் செலுத்துவதால், எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியாவிடம் இருந்து வாங்க பிலிப்பைன்ஸ் முன்வந்தது. 3 யூனிட் பிரம்மோஸ் ஏவுகணை கருவிகள் மற்றும் ஏவுகணைகளை 375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியாவிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் செய்யப்பட்டது.

அதன்படி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மேஸ் ஏவுகணைகளின் முதல் பேட்ஜ், பிலிப்பைன்ஸ்நாட்டுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய விமானப்படையின் ஜம்போ விமானம் சி-17 குளோப் மாஸ்டர் விமானத்தில், பிரம்மோஸ் ஏவுகணைகள் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தன. இதுவே பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் ஏற்றுமதி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அதுல் தினகர் ரானேவின் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவராக அதுல் தினகர் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், புதிய தலைவராக, பிரபல ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஜெய்தீர்த் ராகவேந்திர ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வரும் 1ம் தேதி பொறுப்பேற்பார் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: உஷார்!. எமனாக மாறிய வறுத்த பொட்டுக்கடலை!. சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

English Summary

Brahmos Aerospace appoints new chairman! Missile scientist Dr. Jaytheerth Raghavendra Joshi selected!

Kokila

Next Post

ஆப்பிள் பயனர்களே உஷார்!. தனிப்பட்ட தரவுகளுக்கு ஆபத்து!. மத்திய அரசு எச்சரிக்கை!

Wed Nov 27 , 2024
Government warns iPhone users of widespread cyber security issues, immediate action is advised

You May Like