fbpx

Wayanad Landslides | வெள்ளத்திற்கு மத்தியில் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவன்..!! வைரலாகும் வீடியோ..!!

கேரளாவின் இடுக்கியில் கனமழைக்கு மத்தியில் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக நிரம்பி வழியும் பாலத்தை காரில் கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதன்கிழமை X இல் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக விரக்தியுடன் தனது காரில் நிரம்பி வழியும் பாலத்தை கடப்பதைக் காண முடிந்தது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், மாருதி ஆல்டோ கார் ஒன்று பாலத்தை கடந்து செல்வதைக் காணலாம்.

இதற்கிடையில், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்திய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. 700-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவித்த 179 பேரையும், 4 உடல்களையும் மீட்டனர். அட்டமலை, முண்டக்காய் மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் தேடும் பணிகள் இன்று காலை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Read more ; நீங்க கார் வாங்கப் போறீங்களா..? அப்படினா இந்த விஷயங்களை செக் பண்ணுங்க..!!

English Summary

Brave Husband Crosses Overflowing Bridge In Maruti Alto To Take Pregnant Wife To Hospital In Idukki

Next Post

PM Kissan: இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் மத்திய அரசு வழங்கும் ரூ.6000 திட்டம்...!

Thu Aug 1 , 2024
6000 scheme provided by the central government without the intervention of middlemen

You May Like