fbpx

’கோட்’ படத்தின் சஸ்பென்ஸை உடைக்கணும்..!! பங்கமா கலாய்த்து..!! விஜய் படத்திற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்..?

விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தை தோல்விப் படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக சிலர் ஸ்கெட்ச் போட்டு சதி திட்டம் தீட்டுவதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் ரஜினி ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் ட்விட்டர் ஐடிக்கள் சதி திட்டம் தீட்டும் ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோ தீயாக பரவி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் ஒன் நடிகர் என்கிற போட்டா போட்டி விஜய் – அஜித் ரசிகர்களை தாண்டி தற்போது விஜய் – ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் எழுந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் டாப் ஹீரோக்களின் படங்களை காலி செய்ய சோஷியல் மீடியாவில் சிலர் தீயாக வேலை செய்து வருகின்றனர். இந்த உண்மையை வெளிச்சம் போட்டு ட்விட்டர் ஸ்பேஸ் காட்டுகிறது.

’கோட்’ படத்தின் டிரெய்லரில் நிச்சயம் விஜயகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனை ரிவீல் செய்ய மாட்டாங்க. ஆனால், சில ஏஐ காட்சிகளை ரிவீல் பண்ணுவாங்க. படம் கேம் கதையாக இருந்தால் ‘ரா ஒன்’ படத்தை போட்டு அடிக்க வேண்டும். எந்த இடத்தில் ஒரு சின்ன கேப் கிடைத்தாலும் கோட் படத்தை பங்கமாக கலாய்த்து, அனைத்து சஸ்பென்ஸையும் பிரேக் பண்ணி படத்தை ஓடவிடாமல் செய்ய வேண்டும் என பேசிக் கொள்கின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் நெகட்டிவிட்டியை பரப்ப வேண்டாம் என நடிகர்கள் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருந்தாலும், பெரிய படங்கள் வரும் போது ஒற்றுமையே இல்லாமல் பலரும் அந்த படங்களை ட்ரோல் செய்து காலி செய்ய காரணமே இதே போல ஒவ்வொரு டாப் ஹீரோக்களின் ரசிகர்களும் திட்டம் தீட்டி ட்ரோல் செய்வது தான். விஜய் ரசிகர்கள் ரஜினிக்கும், ரஜினி ரசிகர்கள் விஜய்க்கும் இப்படி செய்வதால், இழப்பு தயாரிப்பாளரின் தலையில் தான் வந்து விழுகிறது.

சினிமா படங்களை பார்த்து பொழுது போக்கிய காலம் எல்லாம் போய் தற்போது சினிமா படங்களுக்காக சண்டை போடுவது, படத்தை வெற்றி பெற விடாமல் சதி திட்டம் தீட்டுவது என்கிற ரேஞ்சுக்கு இளைஞர்களின் மனங்களில் இந்த முன்னணி ஹீரோக்களின் படங்கள் வன்மத்தை விளைவித்து விட்டதே என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Read More : சிவகார்த்திகேயன் படத்தில் லோகேஷ் கனகராஜ்..!! என்ன ரோல் தெரியுமா..?

English Summary

An audio is going viral on the internet saying that some people are plotting a conspiracy to make Vijay starrer ‘Kot’ a flop.

Chella

Next Post

பிரபல நடிகையுடன் நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம்..!! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!!

Thu Aug 8 , 2024
Na Digar Naga Chaitanya and Sobitha Thulipala are getting engaged today, reports are doing the rounds.

You May Like