fbpx

அம்மா உணவகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி..? சென்னை மாநகராட்சி முடிவு..!

அம்மா உணவகங்கள் மூலம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. 1,545 பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சிற்றுண்டிக்கு ஆண்டுக்கு ரூ.1.66 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில், சென்னையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் இருந்து தயாரித்து வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

அம்மா உணவகங்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி..? சென்னை மாநகராட்சி முடிவு..!

சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் உள்ள நிலையில், இந்த உணவங்களால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் சிற்றுண்டி தயாரித்து பள்ளிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்னும் 3 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

Tue Aug 2 , 2022
தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌ மற்றும்‌ கோவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை முதல்‌ அதி கனமழையும்‌, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும்‌ […]

You May Like