1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்..
பள்ளி, மாணவர்களுக்கு மனநலன், உடல்நலன் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “ 1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்க போகிறது.. அதற்கான அரசாணையில் நேற்று தான் நான் கையெழுத்திட்டேன்.. மாணவர்கள் முதலில் தன்னம்பிக்கையை பெற வேண்டும்.. தன்னம்பிக்கை வந்துவிட்டால் போதும் படிப்பு தானாக வந்துவிடும்..
மாணவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.. சோம்பேறித்தனம் வளர்ச்சிக்கு பெரிய தடை.. எதையும் நாளைக்கு படித்துக் கொள்ளலாம், நாளைக்கு எழுதிக்கொள்ளலாம் என்று தள்ளிப் போட வேண்டும்.. அதற்கு உடல்நலத்தை காக்க வேண்டும்.. படிப்பை தவிர வீண் சிந்தனைகளை சிந்திக்க வேண்டும்.. நன்றாக சாப்பிடுங்கள். நன்றாக உடலை கவனித்து கொள்ளுங்கள்.. நன்றாக படியுங்கள்.. ஒரு முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் இதை நான் சொல்லவில்லை.. பெற்றோர்களில் ஒருவராக சொல்கிறேன்.. “ என்று தெரிவித்தார்..