ஜூலை 2ஆம் தேதி 10ஆம் வகுப்புக்கான துணைத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் வரும் 24ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், ஜூன் 25, 26ஆம் தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அறிவியல் செய்முறைப் பாட பயிற்சி வகுப்பில் சேர மே 16ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று 125 ரூபாய் கட்டணமாக செலுத்தி பெயர்களைப் பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி சீட்டை காண்பித்தால் மட்டுமே அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவர்.
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை
ஜூலை 2ஆம் தேதி – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்
ஜூலை 3ஆம் தேதி – ஆங்கிலம்
ஜூலை 4ஆம் தேதி – கணக்கு
ஜூலை 5ஆம் தேதி – அறிவியல்
ஜூலை 6ஆம் தேதி – விருப்ப மாெழிப்பாடம்
ஜூலை 8ஆம் தேதி – சமூக அறிவியல்
Read More : அதிகாலையில் தூங்கச் சென்றால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!