அதிமுக பொதுக்குழு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அம்மன் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் தனிநீதிபதி தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதாவது ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.. எனவே ஜூலை 11 பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும்.. இது எடப்பாடி பழனிசாமி தரப்பு கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாக பார்க்கப்படுகிறது.. அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..