fbpx

BIG BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..!! சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!

அதிமுகவினர் மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று ஒருநாள் மட்டும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்றும் சபாநாயகரின் இருக்கை சுற்றி நின்று மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

Read More : ரூ.100 கோடி மோசடி..!! தலைமறைவான மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!! விரைந்தது தனிப்படை..!!

English Summary

Speaker Appavu ordered the entire session to be suspended as the AIADMK again stormed the assembly.

Chella

Next Post

500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ் பேங்க்!! கதறும் ஊழியர்கள்!காரணம் இதுதான்!

Wed Jun 26 , 2024
Private lender Yes Bank has reportedly laid off hundreds of employees in a restructuring exercise. The layoffs reportedly happened across several vertices, from wholesale to retain, as well as the branch banking segment.

You May Like