டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில், டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில், அது கைவிடப்பட்டது இருப்பினும் மதுபான கொள்கை முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அதேபோல் ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார்.
தெலுங்கானா எம்எல்சி கவிதா (தெலுங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள்) ம்ற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே இவர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனியே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இதில் சஞ்சய் சிங் எம்பி, மணிஷ் சிசோடியா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். கவிதாவுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது.
இந்நிலையில் தான், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Read More : வாகன ஓட்டிகளே..!! மறந்துறாதீங்க..!! போலீசிடம் சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?