fbpx

#Breaking..!! தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பு..!! நடிகர் மனோபாலா காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

தமிழ் சினிமாவில், துணை இயக்குனராக இருந்து பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியவர் மனோபாலா. பின்னர் சில திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி, ஒரு காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் மனோபாலா. இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமாக உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் மிகப்பெரிய பிளஸ் என கூறலாம்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனோபாலா, திடீரென காலமானார். கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படும் நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் கடைசியாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

50,000 சம்பளத்தில் மத்திய அரசில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு….! இன்றே கடைசி நாள் உடனே முந்துங்கள்…..!

Wed May 3 , 2023
மத்திய அரசு பணிகளில் காலியாக இருக்கின்ற 7,500 குரூப் பி, குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பணியிடத்தை பொறுத்து ஊதியம் 25000 ஆயிரம் ரூபாய் முதல் 150000 வரையில் வழங்கப்படலாம். அதோடு இது தொடர்பான விவரங்களை மேலும் தெரிந்து கொள்வதற்கு ssc.nic.in என்ற […]

You May Like