fbpx

#Breaking : பிப்.27-ல் தமிழகத்தில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது..

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முறையே, மார்ச் 12, மார்ச் 15, மார்ச் 22 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது.. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.. இந்நிலையில் இந்த 3 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..

அதன்படி திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. 3 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்….! சிறுவன் உட்பட 3 பேர் அதிரடி கைது….!

Wed Jan 18 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இது போன்ற தவறுகள் குறைந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. ஒருபுறம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் மறுபுறம் இது போன்ற தவறுகள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.அந்த வகையில், சட்டீஸ்கர் பால்கர் பகுதியில் நேற்று 13 வயது சிறுமியை […]

You May Like