fbpx

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17,18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, இண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 19,20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ பிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27- 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

இன்று மத்திய மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்துலும்‌ இடையிடையே 65 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. கர்நாடக கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

நாளை மத்திய கிழக்கு மற்றும்‌ அதனை ஓட்டிய தெற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும்‌ இடையிடையே 60 கி.மீ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

“ இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது..” பிரதமர் மோடி எச்சரிக்கை..

Sat Jul 16 , 2022
இலவசங்கள் வழங்குவதாக கூறி வாக்கு சேகரிக்கும் கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. உத்தரப்பிரதேசத்தில் 296 கிமீ நீளமுள்ள பண்டேல்கண்ட் விரைவுச் சாலையை திறந்து வைத்த பிறகு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது “ இலவசங்கள் வழங்குவதாக கூறி வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிக்கும் கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் ஆபத்தானது என்றும் கூறினார். இலவசங்களை வழங்குவதாக கூறுபவர்கள் உங்களுக்காக புதிய […]
’

You May Like