நாடு முழுவதும் இந்தாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில், காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், சரவெடிக்கான தடை தொடரும் என்று விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.