fbpx

Breakingnews : அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனு இன்று மாலை முக்கிய முடிவை எடுக்கிறது நீதிமன்றம்….!

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த புதன்கிழமை அதிகாலை சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அதற்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காதலில் வைக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. அதோடு இந்த வழக்கில் உடனடியாக விசாரணை நடத்தி இன்று மாலையே இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சார்பாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

வெள்ளத்தில் மூழ்கிய 940 கிராமங்கள்..!! குஜராத்தை தலைகீழாக திருப்பிப்போட்ட பிபர்ஜாய் புயல்..!!

Fri Jun 16 , 2023
கடந்த 6ஆம் தேதி அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய இந்த புயல், வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை, மாண்ட்வி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகத்திற்கு அருகில் கரையை கடந்தது. இந்த புயல் நேற்றிரவு 11.30 மணியளவில் கரையை கடந்த நிலையில், சுமார் 115 முதல் 125 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது […]

You May Like