fbpx

#Breaking..!! பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்..!! எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது..!! அண்ணாமலை அதிரடி

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராமை 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சி சரணிடன், பாஜக ஓபிசி அணி நிர்வாகி திருச்சி சூர்யா தொலைபேசியில் ஆபாசமாக பேசிய விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.

#Breaking..!! பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்..!! எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது..!! அண்ணாமலை அதிரடி

இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை OBC அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Breaking..!! பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்..!! எவ்வித தொடர்பும் வைக்கக் கூடாது..!! அண்ணாமலை அதிரடி

மேலும், ”தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பணம் கொடுக்காததால் மனைவி மீது வீசிய வெந்நீர்.. தலைமறைவான கணவன்..!

Tue Nov 22 , 2022
மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், […]

You May Like