வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.