fbpx

BREAKING | கிருஷ்ணகிரி வழக்கு..!! சிவராமனை தொடர்ந்து அவரது தந்தையும் உயிரிழப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்சிசி முகாம் நடைபெற்றது. அதில், 17 மாணவிகள் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்ற 8ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியை பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சி நிர்வாகியுமான சிவராமன் (35) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சியாளர் சிவராமன் உள்பட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உயிரிழந்தார்.

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கில் தலைமறைவாக இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயன்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். கைதான சிவராமனுக்கு கால் முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிவராமனின் தந்தை அசோக்குமார், குடிபோதையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். காவேரிபட்டனம் அருகே போதையில் விழுந்த அசோக்குமார், உயிரிழந்தார். இதையடுத்து, இருவரது உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு..!! கைதான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் திடீர் மரணம்..!!

English Summary

Sivaraman’s father, Ashokumar, fell down in a drunken stupor and died of severe head injuries.

Chella

Next Post

விஜய்க்கு இப்படி ஒரு நிலைமையா..? அடி மேல் அடி..!! என்ன செய்யப்போகிறார்..?

Fri Aug 23 , 2024
There is a problem with the party flag introduced by Tamil Nadu Victory Kazhagam President Vijay.

You May Like