சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் நடைபெற்று வருகிறது. இதில், 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருமொழிக் கொள்கையில் உறுதி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான கையாலாகாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை என்றும் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read More : BREAKING | ‘தவெகவில் விஜய்க்கே முழு அதிகாரம்’..!! பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!!